தரவு மோசடி – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்தை மீறுதல்
விளக்கம்:
கோவிட் – 19 பரவல் காரணமாக இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவிட் – 19 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குதல் தொடக்கம் ஏராளமான காரணங்களுக்காக சர்ச்சைக்குரிய வகையில் விவாதிக்கப்பட்ட முக்கிய நிறுவனங்களில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் (NMRA) ஒன்றாகும். இருப்பினும், NMRA யின் தரவுத்தளமானது அத்துமீறப்பட்டு “மருந்துக்களின் உருவாக்கம் மற்றும் ஏனைய இரகசிய ஆவணங்கள்” தொடர்பில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக 2021 ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது. சுமார் 2TB தரவுகள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. [i]
இந்த தகவல் இடைவெளி மற்றும் தகவல் (கசிவு இருப்பின்) “உள்நாட்டு மருந்து நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு தலைமை நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் வணிக உறவுக்கு” உடனடி அச்சுறுத்தலாக அமையும் என சண்டே டைம்ஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?
- வெளிப்படைத்தன்மை இல்லாமை
- பொதுச் சொத்துக்களை புறக்கணித்தல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல்
- சாத்தியமான ஓர் நாசவேலைக்கான செயல் (அழிவின் மூலம் ஒரு நிறுவனத்தை பலவீனப்படுத்துதல்)
இதுவரை நடந்த விடயங்கள் என்ன?
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) யானது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. [ii]
- மரியாதைக்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் மற்றும் வேறு சிலரும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர். [iii]
என்ன செய்ய முடியும்?
- சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்தல்
- விசாரணை மூலம் பெறப்பட்ட விடயங்களை பொதுவில் வெளிப்படுத்துதல்
- அரச செயற்பாடுகள் மற்றும் பொது துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த கோரல்
[i] https://www.sundaytimes.lk/210815/news/mystery-deepens-over-missing-files-on-nmra-cloud-service-provider-had-no-backup-452555.html
[ii] https://www.newsfirst.lk/2021/08/30/nmra-data-loss-sjb-lodges-complaint-with-cid/
[iii] http://www.colombopage.com/archive_21B/Sep19_1632064699CH.php