இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்
விபரங்கள்:
இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை 2022 இல் முகங்கொடுத்ததுடன், அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையை அறிவித்தமை மற்றும் முதன் முறையாக கடன் மீள் செலுத்துவது நிறுத்தப்பட்டது[1].
கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) அணுகுவதை அரசு குறிப்பிடத்தக்க அளவு காலம் தாமதப்படுத்தியதுடன், எஞ்சியிருந்த அந்நியச் செலாவணி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கும் செலவிடப்பட்டது[2].
கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) அணுகுவதை அரசு குறிப்பிடத்தக்க அளவு காலம் தாமதப்படுத்தியதுடன், எஞ்சியிருந்த அந்நியச் செலாவணி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கும் செலவிடப்பட்டது[3].
நாள் தோறும் சுமார் 13 மணி நேரம் மின் வெட்டு இடம்பெற்றதுடன் [4] (பின்னர் அது 1-2 மணி நேரமாக குறைக்கப்பட்டது [5]), 24 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள்/அன்றாட நுகர்வுக்கு வரையறுக்கப்பட்ட எரிபொருளைப் பெற வேண்டியிருந்தது.
குழப்பமடைந்த பிரஜைகள் எரிபொருள் பதுக்கல் மற்றும் அதிகப்படியான நுகர்வுகளை செய்தனர் அதைத் தடுக்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் வகையில் “தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்” ஒன்றை அறிமுகப்படுத்தியது.[6] இந்த முறையின் ஊடாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வாரம் தோறும் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதுடன் 2023 ஆகஸ்ட் மாதம் வரை அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படட்டது.
டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போனமை எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணமானது. அதற்கு மேலதிகமாக, உர நெருக்கடி காரணமாக அது வரை பின்னடைந்திருந்த விவசாயத் துறைக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டது[7].
நீண்ட மின் வெட்டு, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுகளின் பற்றாக்குறை மற்றும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக கொழுப்பு நகரில் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பட்டதுடன், பின்னர் அந்த ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் பரவியது[8].
இருக்கும் முறையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான தேவையை வலியுறுத்தி, அப்போதைய ஜனாதிபதியாக செயல்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இராஜினாமா செய்யுமாறும், அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு பூராகவும் சிவில் போராட்டங்கள் எழுந்தன.
கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி, மரத் தடிகள் மற்றும் சில சமயங்களில் உடல் பலம் என்பவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் போராட்டக்காரர்களை ஒடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மேலதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டனர். எதிர்ப்புகளை அடக்கும் முயற்சியில் அரசாங்கம் பலமுறை அவசரகால நிலைமையை அறிவித்ததுடன், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டமையும் அவதானிக்கப்பட்டது[9]
அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மக்களின் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை முடக்குவதற்கு, மற்றும் எதிர்ப்புகளை மேற்கொள்வதற்கு மற்றும் ஒன்றுகூடுவதற்கு அவர்களுக்குக் காணப்படும் உரிமை என்பவற்றை சட்ட விரோதமாக வரையறுக்க அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தது[10].
பல மாதங்களாக இடம்பெற்ற பொது மக்களின் பாரிய ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதிக்கு தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய நேர்ந்தது. அதன் விளைவாக அரசியலமைப்பு முறைமையொன்றின் ஊடாக புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதுடன், அவரின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது[11].
இங்குள்ள ஊழல் நடவடிக்கைகள் யாது?
- பொது நிதி மற்றும் வளங்களை தவறாகப் பயன்படுத்துதல்
- தவறான பொருளாதார முகாமைத்துவம்
- கொள்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாமை
- அதிகாரத் துஷ்பிரயோகம்
- பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கட்டமைப்பு ரீதியாகப் பலவீனப்படுத்துதல்
- வினைத்திறனற்ற நிர்வாகம்
- வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை
- திறந்த தகவல்கள் இன்மை
உறவுமுறை சார்ப்பு (Nepotism)
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
இலங்கைப் பிரஜைகள்
இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
இந்த விடயங்களுக்கு அமைய, ஜூன் 2022 இல், TISL மற்றும் மூன்று மனுதாரர்களுடன் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தது. சட்டமா அதிபர் (முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி), முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 பிரதிவாதிகள் குறிப்பிடப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் வீழ்ச்சிக்கு பாதிப்பாக இருந்த தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை மேற்கொண்ட இடங்களில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என பொது நலன் கருதித் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது[12].
வரிச் சலுகைகளினால் அரச வருமானம் குறைதல், அந்த வரிச் சலுகைகளை மீளப் பெறுவதற்குத் தவறியமை, எவ்வித மறுசீரமைப்பும் இன்றி பிணைக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காகத் தீர்மானித்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதை மறுத்தல் என்பன இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்த பிரதான காரணிகள் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது[13].
உயர் நீதிமன்றம் 2022 ஒக்டோபர் இல் இந்த வழக்கைத் தொடர அனுமதித்தது[14]. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த அறிக்கையை சமர்பிப்பது உள்ளிட்ட பல இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம் வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நிதியமைச்சர் போன்றோருக்கு செய்யப்பட்ட அனைத்து தகவல் தொடர்புகள் மற்றும் பரிந்துரைகளின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறும் தற்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பில் TISL பிரஜைகளுக்கு தொடர்ந்தும் புதுப்பித்த தகவல்களை வழங்கியதோடு, இது குறித்து பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் நோக்கத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்றம் (நவம்பர் 14) ம் திகதி, பொது மக்கள் நம்பிக்கையை மீறியமை மற்றும் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவை மீறியமை, மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், பேராசிரியர், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் நாணய சபை மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அவர்களின் பொருளாதார நிர்வாகத்தில், நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடியை வழிவகுத்தது எனவும் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் உள்ளடக்கியுள்ள முக்கிய அவதானங்கள் சில கீழே குறிப்பிட்டுள்ளன.
- பிரதிவாதிகளின் நடத்தை நெருக்கடி நிலைமைக்கு நேரடியாக பங்களித்தது.
- நாட்டின் சிறந்த நலனுக்காக செயல்பட்டு பொறுப்பாக இயங்குவதுடன், பொருளாதாரத்தின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்டபடுத்தும் விடயங்களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, தாக்கத்தை மேலும் மோசமாக்காமல் இருக்க பிரதிவாதிகள் அறிந்திருக்க வேண்டும்.
- பொதுமக்கள் நலன் கருதி தங்கள் கடமைகளை சரியான முறையில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு அரச அலுவலர்களை சார்ந்ததாகும்.
- பிரதிவாதிகளுக்கு பொது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு உயர் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது மற்றும் அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி கடமைகளை ஆற்றுவதற்குக் கடமைப்பட்டவர்கள்.
- பிரதிவாதிகள் தாங்கள் எடுத்த முடிவுகளை கொள்கை முடிவுகள் எனக் கூறி பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க முடியாது.
- பிரதிவாதிகள் நிலைமையை நன்கு அறிந்திருந்ததால், அத்தகைய பேரழிவைத் தடுக்க அவர்களுக்கு முழு அதிகாரம் இருந்தது.
- பிரதிவாதிகள் பொது மக்கள் நலன் கருதி நிலைமையை சரிசெய்ய அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
- பிரதிவாதிகலின் ஒட்டுமொத்த செயல்களும் செயலற்ற தன்மையும் நெருக்கடி நிலைமைக்கு வழிவகுத்தன.
- பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவது அனைத்து பொது அதிகாரிகளுக்கும் பொதுவானது. எனவே, பிரதிவாதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.
- பிரதிவாதிகளின் நடவடிக்கைகள், புறக்கணிப்புகள் மற்றும் நடத்தை ஆகியவை பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்தன.
https://www.supremecourt.lk/images/documents/sc_fr_195_and_212_2022.pdf
2022 மே 9 ஆம் திகதி வன்முறை மற்றும் அமைதியின்மையைத் தூண்டியதற்காக மஹிந்த ராஜபக்ஷ உட்பட 16 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்தது [15].
வேறு என்ன செய்ய முடியும்?
- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் அதற்காக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவித்தல்.
- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பாராளுமன்றத்தைக் கோருதல்.
- அத்தியாவசிய ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களை ஆரம்பித்தல்[16].
- மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புக் கூறும்படி வலுப்படுத்தல் (அவர்களின் சொத்துப் பிரகடனங்களை வெளியிடுதல் மற்றும் தேர்தல் பிரச்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மூலம்).
திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க கட்டாயப்படுத்துதல்.
[1] https://www.ft.lk/top-story/Sri-Lanka-declares-bankruptcy/26-733409
[2] https://www.reuters.com/world/asia-pacific/shocks-missteps-how-sri-lankas-economy-ended-crisis-2022-02-25/
[3] https://www.reuters.com/world/asia-pacific/we-are-going-die-food-shortages-add-sri-lankas-woes-2022-05-20/
[4] https://www.aljazeera.com/news/2022/3/31/sri-lanka-crisis-forces-13-hour-blackouts-hospitals-stop-surgery
[5] https://cebcare.ceb.lk/Incognito/DemandMgmtSchedule
[6] https://ceypetco.gov.lk/2022/07/16/ministry-of-power-and-energy-launches-national-fuel-pass-to-streamline-fuel-distribution/
[7] https://www.spglobal.com/commodityinsights/en/market-insights/blogs/agriculture/081022-sri-lanka-crisis-food-organic-farming
[8] https://www.reuters.com/world/asia-pacific/shocks-missteps-how-sri-lankas-economy-ended-crisis-2022-02-25/
[9] https://www.aljazeera.com/news/2022/4/1/sri-lanka-declares-state-of-emergency-as-protests-spread
[10] https://www.hrw.org/news/2022/09/27/sri-lanka-revoke-sweeping-new-order-restrict-protest
[11] https://www.bbc.com/news/world-asia-62202901
[12] https://www.tisrilanka.org/tisl-files-petition-in-the-sc-demanding-accountability-for-the-economic-crisis/
[13] https://www.tisrilanka.org/wp-content/uploads/2022/06/Public-Petition.pdf
[14] https://www.tisrilanka.org/supreme-court-grants-leave-to-proceed-in-the-case-filed-by-tisl-and-3-others/
[15] https://www.ft.lk/news/Travel-ban-imposed-on-Mahinda-Rajapaksa-and-16-others/56-734756
[16] https://www.tisrilanka.org/15-points-on-essential-anti-corruption-reforms-to-revive-sri-lanka%e2%80%af/