எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் இழப்பீடு கோரப்பட்டது

இழப்பு:

இலஞ்சம் வழங்கியதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது எயார்பஸ் SE நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது, பின்னர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்காக 116 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 23 பில்லியன் ரூபா) செலுத்த நேரிட்டது. இழப்பானது சுமார் 116 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (23 பில்லியன் ரூபா) ஆகும். [i][ii]

விளக்கம்:

2013 ஆம் ஆண்டு 10 aircrafts விமானங்களை கொள்வனவு செய்வதில் செல்வாக்கு செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியின் (CEO) மனைவிக்கு 16.84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த ஏயார்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்ட விடயமானது எயார்பஸ் மற்றும் பிரித்தானியாவிலுள்ள தீவிர மோசடிகளைக் கண்காணிக்கும் அலுவலகம் (SFO) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தத்தின் (R v. Airbus SE – ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தம் 2020 (Deferred Prosecution Agreement 2020) (DPA) ஓர் பகுதியாக உண்மைகளின் அறிக்கை (The Statement of Facts (SoF) மூலம் வெளியாகியது. பரிவர்தனைகள் கண்காணிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) மனைவிக்கு சொந்தமான புருனேயில் அமைந்துள்ள ஓர் கடல்கடந்த நிறுவனத்தின் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட அந்த தொகை செலுத்தப்பட்டது. இந்த SoF படி, எயார்பஸ் நிறுவனமானது குறித்த கடல்கடந்த நிறுவனத்திற்கு மொத்தமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 406 மில்லியன் ரூபா) இலஞ்சமாக வழங்கியுள்ளது.[iii]

குறித்த தொகையானது ஆரம்பத்தில் புருனேயில் உள்ள கடல்கடந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியின் (CEO) வங்கி கணக்குகளுக்கு இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பணம் பரிமாற்றப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் இந்த சிங்கப்பூர் கணக்கிலிருந்து இலங்கையிலுள்ள பல வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது.[iv] 2020 ஆம் ஆண்டு DPA (ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தம் 2020/ Deferred Prosecution Agreement 2020) அறிவிக்கப்பட்ட போது, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவும் அவரது மனைவியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.[v] பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்நாட்டுச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தகவல்கள் குறைவாகவே காணப்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட புருனேயில் உள்ள நிறுவனமொன்றுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தி கொள்முதல் நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தினால் இவ்வாறு இலஞ்சம் வாங்கியமை நிரூபிக்கப்பட்டால் இலஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 17 மற்றும் 19 இன் படி குற்றமாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

  • பொதுமக்கள்
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ரத்து செய்தமைக்காக இலங்கை செலுத்த நேரிட்ட தொகையினை வேறு முதலீடுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம், அதாவது வைத்தியசாலை, கல்வி மற்றும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முதலீடு செய்திருக்கலாம்.

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • கபில சந்திரசேனவும் (CEO) அவரது மனைவியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
  • சேதங்கள், நற்பெயர் பாதிப்பு, செலவுகளை திரும்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது சமீபத்தில் எயார்பஸ் SE நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக கோரியது. [vi] [vii]
  • TISL நிறுவனமானது இலங்கைக்கான இழப்பீடுகளைப் பெறுவது தொடர்பாக பிரித்தானியாவில் அமைந்துள்ள Serious Fraud Office (SFO) உடன் தொடர்பு கொண்டது.

என்ன செய்ய முடியும்?

  • இச்சம்பவத்துடன் தொடர்புடைய உள்நாட்டு அரச அதிகாரிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தல்.
  • எயார்பஸ் SE மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தத்தை பொதுவில் பகிரங்கப்படுத்துமாறு கோருதல்.
  • நாட்டில் குற்றத்தினால் பெற்றப்பட்ட சொத்துக்கள் சட்டம் மற்றும் சொத்து மீட்பு என்பவற்றின் சட்ட கட்டமைப்பு அறிமுகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருதல்.
  • இலங்கை நாட்டு மக்களுக்கு சொத்துக்களை மீட்பதற்கும் பாதிப்புக்கான இழப்பீட்டினை பெற்றுக்கொள்வதற்குமான சர்வதேச ஒத்துழைப்பிற்கு வாதிடல்.

 

[i][i] https://parliament.lk/uploads/comreports/1566538443076012.pdf

[ii] https://www.tisrilanka.org/airbus-bribery-tisl-writes-to-uks-serious-fraud-office/

[iii] https://www.tisrilanka.org/tisl-welcomes-srilankans-decision-to-sue-airbus-and-calls-for-further-domestic-action/

[iv] https://www.newsfirst.lk/2020/02/20/the-airbus-scandal-how-the-bribe-moved-around-sri-lankan-circles/

[v] https://www.aa.com.tr/en/asia-pacific/srilankan-airlines-ex-ceo-wife-remanded-for-bribery/1726797

[vi] https://www.tisrilanka.org/tisl-welcomes-srilankans-decision-to-sue-airbus-and-calls-for-further-domestic-action/

[vii] https://www.ft.lk/top-story/SriLankan-Airlines-sues-Airbus-for-1-b/26-714934

 

This website uses cookies to improve your web experience.