மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது பிரிவு

விபரங்கள்

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சீனாவின் Metallurgical Corporation of China (MCC) Ltd, ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான 19.6 கி.மீ. பகுதியை, அதாவது மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மூன்றாம் பிரிவிவை நிர்மாணிப்பதற்கான டெண்டரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது [41]. MCC ஐ விட அதிக விலையை சமர்ப்பித்த போதிலும், நிர்மாண அனுமதியை உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதால், போட்டித் தன்மையான விலை முன்வைப்பு தொடர்பான வழிகாட்டல்களை இலங்கை மீறியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தில் ஈடுபட்டு வரும் MCC நிறுவனம்[42], தமது நிறுவனத்தை விட LIDC என அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் முறைப்பாடு செய்தது.

MCC இனால், 15 வருடங்களுக்கான நிர்மாணம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகள் மற்றும் நிதி செலவுகள் உட்பட 1070 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலை மனு குறிப்பிட்டிருந்த அதேவேளை, LIDC நிறுவனத்தினால் 62.4 டொலர் மில்லியன் 30 அரையாண்டு தவணைகளில் செலுத்தும் வகையில் 1872 மில்லியன் அமெரிக்க டொலர் விலை மனு முன்வைக்கப்பட்டது.

முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து 2021 இல் பின்பற்றப்பட்ட ஆரம்ப டெண்டர் நடைமுறையை இரத்துச் செய்ய முன்மொழிந்திருந்தார். எனினும், அதற்கு 10 நாட்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து ஆரம்ப செயல்முறையைத் தொடருமாறு பரிந்துரைத்தார்[43].

இது விரைவான மற்றும் வெளிப்படை தன்மை அற்ற செயன்முறை ஒன்று என்பதுடன், அது தொடர்பான தகவல்கள் திறந்த வெளியில் இல்லை. அதனால் விநியோகஸ்தர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் முறையான செயன்முறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது[44].

இங்குள்ள ஊழல் நடவடிக்கைகள் யாது?

  •  முறையான கொள்முதல் செயன்முறையை மீறுதல்.
  • தீர்மானம் எடுத்தவர்கள் முறையற்ற அணுகூலங்களை பெற்றனரா என்ற மற்றும் அவர்கள் தனியார் தரப்பினருடன் சேர்ந்து மோசடி செய்தனரா என்ற சந்தேகம் ஏற்படுதல்.
  • பின்பற்றப்பட்ட செயன்முறை தொடர்பில் பொது மக்களுக்குப் பொறுப்புக் கூறல் இன்மை.
  • இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறல் இன்மை.

 

இந்த விடயங்கள் சம்பந்தமான நிதிப் பெறுமதி

542.6 பில்லியன் ரூபாய் (1.87 பில்லியன் அமெரிக்க டொலர்)

இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினருக்கும் ஒப்பந்தம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவு உட்பட பல நிவாரணங்களைக் கோரி சந்துன் துடுகல மற்றும் ரேணுக சம்பத் ஆகிய இரு ஆர்வலர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பொது நலன் கருதி ஒரு மனுவை தாக்கல் செய்தனர்[45].

இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தும் செயன்முறை காரணமாக, முறையான கொள்முதல் செயன்முறை மீறப்படுவதாக மனுவில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன [46].

அரசாங்கம் இந்தத் டெண்டரை முன்கொண்டு செல்வதில்லை எனவும், திட்டத்திற்காக புதிய விலை மனு கோரப்படும் எனவும், 2022 ஜூலை மாதத்தில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார் [47].

“பாதகமான பொருளாதார நிலைமைகள்” காரணமாக டெண்டர் இரத்து செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு பின்னர் அறிவித்தது [48].

வேறு என்ன செய்ய முடியும்?  

  • அடுத்த கொள்முதல் செயன்முறையில் உரிய முறைமையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்
  • இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பிரஜைகளாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தல்.
  • திறந்த மற்றும் வெளிப்படையான தகவல் கட்டமைப்புகள் மற்றும் இலத்திரனியல் கொள்முதல் கட்டமைப்புகளை கோருதல்.

[41] https://english.theleader.lk/news/1963-highway-robbery-mcc-writes-to-president-on-cep-tender-fraud

[42] https://www.sundaytimes.lk/220417/sunday-times-2/the-hurry-to-award-the-central-expressway-project-hara-kiri-for-lankas-economy-479790.html

[43] https://www.pressreader.com/sri-lanka/sunday-times-sri-lanka/20220403/281715503134271

[44] https://www.sundaytimes.lk/220220/business-times/central-expressway-project-phase-3-tainted-with-irregularities-473234.html

[45] https://www.sundaytimes.lk/220612/news/central-expressway-third-section-rda-tells-court-it-wont-sign-agreements-till-july-26-485787.html

[46] https://www.sundaytimes.lk/220605/news/public-interest-petition-seeks-a-halt-to-central-expressway-section-3-contracts-484968.html

[47] https://www.sundaytimes.lk/220731/news/govt-wont-proceed-with-controversial-cep3-tender-ag-informs-ca-490549.html

[48] https://www.themorning.lk/articles/212521

 

This website uses cookies to improve your web experience.