வெள்ளைப் பூண்டு ஊழல்
இழப்பு எவ்வளவு:
ஊடக அறிக்கைகளின் படி 17.9 மில்லியனுக்கு மேல் [i]
விளக்கம்:
சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 56,000 கிலோவிற்கு அதிகமான பூண்டுகளை கொண்ட இரண்டு கொள்கலன்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆதரவுடன் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் குழு ஒன்றினால் துறைமுகத்திலிருந்து நேரடியாக தனியார் நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக சதொச நிறுவன ஊழியர் ஒருவர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) வழங்கிய தகவலைகளைத் தொடர்ந்து இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.[ii] சதொச நிறுவனத்தின் பல மட்டத்திலான ஊழியர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
பூண்டு மோசடி தொடர்பான தரவுகள் சதொச நிறுவனத்தின் கணினித் தரவுத்தளத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாக அல்லது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. [iii]
இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?
- பொது நிதியை தவறாக பயன்படுத்தல்
- தனிப்பட்ட நலன்களுக்காக பொதுப் பதவிகளை தவறாக பயன்படுத்துதல்
- வெளிப்படைத்தன்மை இல்லாமை
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
- ஓர் அரச நிறுவனம் என்ற அடிப்படையில் லங்கா சதொச நிறுவனம்
- பொதுமக்கள் – பூண்டின் விலை அதிகரித்தமை மற்றும் குறித்த நிதியானது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கும்
இதுவரை நடந்த விடயங்கள் என்ன?
மேற்கூறிய பூண்டுகளை இறக்குமதி செய்தவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. [iv]
என்ன செய்ய முடியும்?
- சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையினை தொடர தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தல்
- குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டுதல்
- சட்ட அமுலாக்க அதிகாரிகளின் விசாரணைகளூடாக பெறப்பட்ட விடயங்களை பொதுவில் பகிருமாறு வேண்டுதல்
[i] https://www.lankanewsweb.net/67-general-news/93408-garlic-scam-at-sathosa-lost-rs-17-9-mn
[ii] https://www.newsfirst.lk/2021/09/15/and-now-a-garlic-scam-heres-your-garlicscam-101/
[iii] https://www.themorning.lk/garlic-scam-computer-records-tampered-with-cid/
[iv] https://www.newsfirst.lk/2021/09/15/garlicscam-four-sathosa-officials-interdicted/